தமிழ்நாடு
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை: தந்தை எடுத்த விபரீத முடிவு

தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து.
நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது என்பதும் இந்த தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினார்கள் என்பதும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசி வழங்கினார்கள் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் சஞ்சய் என்பவர் தேர்வு பயம் காரணமாக தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டார். கடும் தீக்காயங்களுடன் இருந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மகன் தேர்வு பயத்தால் இறந்த செய்தி அறிந்த அவரது தந்தை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தக்க சமயத்தில் அவரது உறவினர்கள் பார்த்ததை அடுத்து அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்வு பயத்தால் மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தை தாங்க முடியாமல் அவரது தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.