தமிழ்நாடு
தருமபுரி ஆதின பட்டினப்பிரவேசம்: தடை உத்தரவை திரும்ப பெற தமிழக அரசு முடிவு?

தருமபுரி ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் தற்போது அந்த தடையை மீண்டும் திரும்ப தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலங்காலமாக நடைபெற்று வரும் தருமபுரி பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரி ஆதினத்தை பல்லக்கில் தூக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில் மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்குவதா? என்று திராவிட கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் தருமபுரி ஆதின பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ தடை உத்தரவை பிறப்பித்தார் .
சமீபத்தில் தருமபுர ஆதீன மடத்திற்கு கவர்னர் சென்று வந்ததால் தான் இந்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில் தடை உத்தரவை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவோம் என்றும் நானே பல்லக்கை தூக்குவேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் மே 22ஆம் தேதி திட்டமிட்டபடி தருமபுர ஆதின நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மீண்டும் அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தடை உத்தரவை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ திரும்ப பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




















