இந்தியா
பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை இதுவரை ஆன்லைனில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கவுண்டர்களில் கொடுக்கப்படும் என பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள மூன்று கவுண்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது/ அதுமட்டுமன்றி ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டிக்கெட்டுக்க்ளை விட கூடுதலாக தினமும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் திருப்பதியில் எந்தெந்த கவுண்டர்களில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றியும் இம்மாதம் நடைபெற இருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்
















