இந்தியா
3 நாட்கள் காத்திருப்பா? திருப்பதி சென்ற பக்தர்கள் அதிருப்தி

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய கிட்டத்தட்ட மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நீண்ட வரிசை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
30 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை பக்தர்களுக்கு தரிசன நேரம் ஆவதால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஐபி தரிசனம் மற்றும் வார நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுடன் வரும் தரிசனமும் நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமான கூட்டம் வந்திருப்பதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன.