இந்தியா
தேர்தல் வாக்குப்பதிவு தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 10ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது
ஆனால் தற்போது மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 7ஆம் தேதிக்கு பதில் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெறும் என்றும், அதேபோல் மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது















