Connect with us

இந்தியா

5 மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்.. திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!

Published

on

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையின் வாடகை கட்டணம் 2 மடங்கு முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பதும் இங்கு தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வருமானம் மட்டும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது என்பதும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை கணக்கில் கொண்டு ஏராளமான வசதிகள் குறிப்பாக அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென பக்தர்கள் தங்கும் அறையின் வாடகையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2 மடங்கு முதல் 7 மடங்கு வரை உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கெளஸ்தபம், நந்தகம், பாஞ்சஜன்யம், வகுளமாதா ஆகிய 4 தங்கும் அறைகள் கொண்ட வளாகத்தில் ஒரு அறைக்கு ரூபாய் 500 முதல் 600 வரை கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் அறை வாடகை 150 என இருந்த நிலையில் ஜனவரி 1 முதல் ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாராயணகிரி எண் 4ல் உள்ள அறைகளுக்கான வாடகை இதுவரை ரூ.750 என்ற இருந்த நிலையில் அது ரூ.1700 என உயர்த்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாராயணகிரி விடுதியின் சிறப்பு அறை ஒன்றை வாடகை ரூ.750 என இருந்த நிலையில் அது தற்போது ஜிஎஸ்டி உள்பட ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் சிறப்பு வகை வீடுகளின் வாடகை ரு.2800 என உயர்த்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏழை எளிய மக்கள் தங்கும் எஸ்.என்.சி, ஏ.என்.சி ஏ.எஸ்.சி. எஸ்.இ.சி போன்றா வகை விடுதிகள் இதுவரை வாடகையாக ரூபாய் 50 மட்டும் பெற்று வந்த நிலையில் இவ்விடுதிகளில் வாடகை ரூபாய் 100 என உயர்த்தப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் உள்ள அனைத்து வாடகை வீடுகளின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் செலவு இரட்டிப்பாகும் என்பது உறுதியாகியுள்ளது. கோடிக்கணக்கில் வருமானம் வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாதாரண பக்தர்களீன் வாடகை கட்டணத்தை உயர்த்தியது ஏன் என்ற கேள்வி தற்போது பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது.

திருப்பதிக்கு வரும் வருமானத்தை கணக்கில் கொண்டால் பக்தர்களுக்கு இலவசமாகவே தங்கும் அறைகள் கொடுக்கலாம் என்றும் அல்லது குறைந்த வாடகைக்கு அறை கொடுக்கலாம் என்றும் பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அலிபிரி வாகன சோதனை சாவடிகளிலும் வாகன கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும் திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் தேவஸ்தான பேருந்து கட்டணம், லட்டு வடை பிரசாதம் விலையும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தங்கும் அறைகளின் கட்டணத்தையும் உயர்த்தியதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியபோது ‘பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மைதான் என்றாலும் தங்கும் அறை வாடகையை பல மடங்கு உயர்த்துவது நியாயமில்லை என்றும் ஓரளவு மட்டும் வாடகை உயர்த்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். தங்கும் விடுதிகளின் வாடகை மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதை பணக்கார பக்தர்கள் கண்டு கொள்ளவில்லை என்றாலும் சாதாரண ஏழை எளிய பக்தர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் மீது சுமத்தப்படும் இந்த சுமை குறித்து தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை என்றும் வாடகை ஏற்றுவதற்கு முன் பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சாமானிய பக்தர்களின் சிரமத்தை கணக்கில்கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறை வாடகை கட்டணத்தை குறைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?