வணிகம்
டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?
Published
60 minutes agoon
By
Poovizhi
நகரங்களில் வாழும் பல குடும்பங்களுக்கு D-Mart ஷாப்பிங் என்பது மாதாந்திர வழக்கமாகி விட்டது. குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பலர் கடைக்கு செல்வதோடு, சிலர் ஆன்லைனிலும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், சேமிக்கச் சென்றவர்களே பல நேரங்களில் கூடுதலாக செலவு செய்து வருவது உண்மை.
ஏன் அதிக செலவு ஆகிறது?
பெரும்பாலானவர்கள் பட்டியல் இல்லாமல் கடைக்கு செல்வதால், தேவையற்ற பொருட்கள் டிராலியில் சேர்க்கப்படுகின்றன. ‘ஆஃபரில் இருக்கு’, ‘இதை வாங்கலாமே’ என்ற எண்ணம் திடீர் முடிவுகளை எடுக்க வைக்கிறது. இதனால் பில் கட்டும் நேரத்தில் தான் அதிக செலவு புரிகிறது.
செலவை குறைக்கும் எளிய வழிகள்:
- பட்டியல் தயார் செய்யுங்கள்:
கடைக்கு செல்லும் முன் வீட்டிற்கு தேவையான பொருட்களை தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியங்களை மட்டும் முதலில் கவனிக்கவும். - பசியுடன் ஷாப்பிங் செல்லாதீர்கள்:
பசி இருந்தால் தேவையற்ற ஸ்நாக்ஸ், சாக்லேட் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அதிகம். - முதலில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குங்கள்:
கடையில் நுழைந்தவுடன் முக்கிய தேவைகளை முதலில் வாங்கி முடித்துவிடுங்கள். - ஆஃபர்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்:
எல்லா ஆஃபர்களும் தேவையானவை அல்ல. உங்களுக்கு உண்மையில் தேவையானதா என்பதை பரிசீலிக்கவும். - பட்ஜெட்டை நிர்ணயிக்கவும்:
முன்கூட்டியே செலவுக்கான வரம்பை நிர்ணயித்தால், அதற்கு மேல் செலவிடாமல் கட்டுப்படுத்த முடியும். - சிறிய திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு மூலம், டி-மார்ட் ஷாப்பிங்கில் 50% முதல் 80% வரை தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும். புத்திசாலித்தனமான தேர்வுகள் தான் உண்மையான சேமிப்பை தரும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















