சினிமா
கவுண்டமணிக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி, 85. பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ படத்தின் மூலம் அறிமுகமானார். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்
செந்தில் உடன் இவர் நடித்து பல படங்களின் காமெடிகள் இன்றும் மீம்ஸ்களாக பிரபலமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்திலும் சாந்தி 67 என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளது
இந்நிலையில் சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தி இன்று (மே 5) மதியம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்
கவுண்டமணியின் மனைவி இறுதிசடங்கு நாளை காலை 11.30 சென்னை.பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

















