தமிழ்நாடு
மனைவியும், மகளும் தான் என் எஜமானார்கள்: உருகிய டிடிவி தினகரன்!

இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அமமுக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தினகரன் தன் மனைவி அனுராதா மற்றும் மகள் ஜெயஹரிணி குறித்து பேசினார்.

#image_title
அமமுகவின் மகளிர் தின விழாவில் பேசிய டிடிவி தினகரன், சிறுவயதில் இருந்து என்னுடைய அம்மா மற்றும் பாட்டியின் கண்டிப்பில் வளர்ந்தவன் நான். இப்போது என் மனைவியும், என் மகளும் தான் என் எஜமானார்கள். கல்யாணம் ஆகி 30 ஆண்டுகள் ஆகிறது, இதுவரை நான் தனியாக துணி கூட எடுத்ததில்லை. எனக்கு டெய்லர் கூட அவர்கள் சாய்ஸ் தான். இன்று கூட என் மனைவியிடம் என்ன சட்டை போட வேண்டும் என கேட்டு தான் போட்டுக் கொண்டு வந்தேன்.
எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆண்கள் எல்லாம் நிம்மதியாக இருப்பார்கள். ஓராண்டு சிறையிலிருந்தபோது என் குடும்பத்தை தைரியமாக பார்த்துக் கொண்டவர் என் மனைவி. நான் மிகவும் கொடுத்து வைத்தவன். பொது வாழ்வுக்காகவே என்னை நேர்ந்து விட்டது போல் விட்டுள்ளார்கள். ஆணுக்கு பெண் சமமாக மதிக்கின்ற பண்பு தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் முயற்சி தான் என்றார்.