இந்தியா
3 நாட்கள் முதல் மனைவி, 3 நாட்கள் 2வது மனைவி.. ஞாயிறு அன்று தனிமை.. இளைஞரின் வித்தியாசமான வாழ்க்கை..!

குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை திருமணம் என்பது புனிதமானது என்றும் ஒருவருக்கு ஒருத்தி என்ற நடைமுறையை கடைப்பிடித்து வருகின்றது என்பது தெரிந்ததே. ஆனால் சில சமயம் விதிகளுக்கு முரணாக ஒருவர் இரண்டு திருமணங்களையும் அதற்கு மேல் செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சீமா என்ற பெண்ணை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இரண்டு வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இந்த தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தார். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அந்த இளைஞர் தனது மனைவியை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கு அழைப்புச் சென்றார். மனைவியை சில நாட்கள் அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே தங்கட்டும் என்று அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அந்த இளைஞரின் மனைவி மாத கணக்கில் அவருடைய பெற்றோரின் வீட்டிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கணவருக்கு வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஆன பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவரையும் நெருக்கமாகிவிட இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த சீமா, தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசினார்.
தனக்கும் தனது மகனுக்கும் நிவாரணம் வேண்டும் என்று அவர் கூறிய போது மத்தியஸ்தர்கள் இறுதியாக ஒரு உடன்படிக்கையை எட்டினர். அதன்படி வாரத்தின் முதல் மூன்று நாட்கள் முதல் மனைவியிடனும் அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியிடமும் இளைஞர் வாழ வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு மனைவிகளுக்கும் இரண்டு தனித்தனி வீடுகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது இளைஞரின் பொறுப்பு என்றும் மத்தியஸ்தர்கள் கூறினர்.
இதனை அடுத்து வாரத்தில் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாள் இரண்டாவது மனைவியிடம் வாழ்ந்து வரும் இளைஞர் ஞாயிறு மட்டும் தனிமையில் நிம்மதியாக காலத்தை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.