Connect with us

கட்டுரைகள்

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

Published

on

தன்னம்பிக்கை அவசியம்!

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவனது வழக்கம். ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில் பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார். அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. கோபம் கொண்ட அரசர் பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.

பிச்சைகாரன் கலங்கவில்லை. கல கலவென சிரிக்கத் தொடங்கினான்.

அரசருக்கு மேலும் கோபம். மற்றவர்களுக்கு திகைப்பு. அரசன் பிச்சைக்காரனை “ஏன் சிரிக்கிறாய்?” என்று கோபமாக கேட்க, பிச்சைக்காரன் “என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே. உங்கள் முகத்தில் நான் விழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்” என்றான்,

அரசன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான். தண்டனை ரத்து செய்யப் பட்டது.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். எதை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
kearney news links, biolinker.