சினிமா
ஐஸ்வர்யாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் யாஷிகா

பிக் பாஸ் வீட்டில் ஜனனி நேரடியாகப் பைனலுக்குச் சென்றுள்ளதனால் அவரைத் தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர்.
அதன் பின் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் பஸ்ஸர் மேல் போட்டியாளர்கள் வைத்திருக்கும் கையயை எடுக்கச் செய்வதுதான் டாஸ்க்.
இந்த டாஸ்கில் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.
விஜி, ஜனனி இருவரும் வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்தவுடன் அடுத்ததாக யாஷிகா வந்தபோது மற்ற போட்டியாளர்களுக்கு ஒத்துழைக்காமல் ஐஸ்வர்யா சாதகமாக நடந்து கொண்டார். இதனால் அனைத்துப் போட்டியாளர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

எனவே, இன்று ஐஸ்வர்யா டாஸ்க்கில் சிக்க, விஜி அவரை வச்சு செய்கிறார். டாஸ்கின்போது பருப்புப் பாக்கெட்டை துணியில் கட்டி அதை ஐஸ்வர்யாவின் கையில் கட்டுகிறார்கள். இது விஜயலட்சுமியின் ஐடியா. மேலும் ஐஸ்வர்யாவின் முகத்தில் நீரை ஊற்றுகிறார் விஜி.
யாஷிகாவின் டாஸ்க்கின் போது காப்பாற்றிய ஐஸ்வர்யாவை காப்பாற்ற முடியாமல் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கின்றார்.






