Connect with us

இந்தியா

உலகின் குறைந்த உயரமுள்ள பாடிபில்டர்.. கின்னஸ் சாதனை படைத்தவருக்கு திருமணம்..!

Published

on

உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள ஒருவர் பாடிபில்டராக கின்னஸ் சாதனை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு உலகில் மிகக் குறைந்த உயரத்தை கொண்ட பிரதிக் மோஹிதே என்பவர் பாடிபில்டருக்கான கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். இந்த கின்னஸ் சாதனைக்காக அவர் பல ஆண்டுகள் கடுமையாக உடற்பயிற்சி செய்து உழைத்தார் என்பதும் அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் தான் கின்னஸ் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 அடி 4 அங்குலம் உயரம் மட்டுமே இருந்த மோஹித் தனது நெருங்கிய உறவினர்களாலே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நிலையில், அவர் இந்த உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்போதுதான் அவர் பாடிபில்டர் ஆக முடிவு செய்தார். தனது உடல் அமைப்பை தகுந்த பயிற்சியாளர்களின் அறிவுரையை கேட்டு மாற்ற தொடங்கினார் என்பதும் அவர் தனது உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவே அதிக செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் தளராமல் அவர் தனது உயரத்தையே பாசிட்டிவாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவர் கடுமையாக பல ஆண்டுகள் உழைத்தார். உள்ளூர் பாடிபில்டர் போட்டிகள் மற்றும் தேசிய அளவில் நடந்த பாடிபில்டர் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றார். அப்போது அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு ஆதரவாகவும் நிதி உதவி செய்தனர்.

இது குறித்து மோஹித் கூறிய போது ’என் குடும்பம் என்னை பற்றி மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் நினைத்தது. எனது நண்பர்கள் எனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தனர். அவர்களால் தான் என்னால் இந்த கின்னஸ் சாதனையை செய்ய முடிந்தது என்று கூறினார்.

2021 ஆம் ஆண்டின் உலகின் மிக குறைந்த எடையக்கூடிய பாடிபில்டர் என்ற கின்னஸ் சாதனையை அவர் பெற்ற போது அவரது ஊரில் உள்ள அனைவருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கின்னஸ் சாதனை என்பது தனது இலக்காக இருந்தது என்றாலும் இவ்வளவு விரைவில் தனக்கு இந்த கௌரவம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் என் வாழ்க்கையில் இதை நான் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் விண்ண சாதனை பெற்ற அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. மணமகளும் கிட்டத்தட்ட அதே உயரத்தில் இருக்கும் நிலையில் இருவருக்கும் நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 மணி நேரங்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

Uncategorized3 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..