தமிழ்நாடு
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி!

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன் என நீதிமன்றம் கேள்வி கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன் என்ற கேள்வியை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையை சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரித்தால் தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் ஆனால் மத்திய அரசு இதற்கு முன் வரவில்லை என்றும் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜனை தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
மேலும் திமுக எம்பி திருச்சி சிவா அவர்களும் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் அந்த கடிதத்திற்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கிய அதே நேரத்தில் திருச்சி பெல் நிறுவனத்தில் மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க முன்வராதது ஏன் என்றும் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













