சினிமா செய்திகள்
ஜீ தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர் இவரா?

ஜீ தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை அவதூறாக காட்சிப் படுத்தும் வகையில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று நடந்ததற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் திமுக ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புடன் ஆதி என்ற நபர்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதியதாகவும் இவர் ஏற்கனவே விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் வேலை பார்த்ததாகவும் அவரது முகநூல் பக்கத்தில் இருந்து தெரிய வருவதாக கூறப்பட்டுள்ளது
மேலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான உடன் இந்த நிகழ்ச்சியை பகிர்ந்த திமுக எம்பி சு வெங்கடேசன் ’இது தமிழ் பொங்கல்’ என்று பதிவு செய்துள்ளார். அதற்கு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதிய அன்புடன் ஆதி, ‘நன்றி’ என்றும் எங்கள் ஷோவை ஷேர் செய்ததற்கு நன்றி என்றும் கமெண்ட் செய்துள்ளார்
ஏற்கனவே அவரது முகநூல் பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாகவும், அதிமுக மற்றும் பாஜகவுக்கு எதிர்ப்பாகவும் பல பதிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவுக்கு ஆதரவாகவும் அதிமுக பாஜக வுக்கு எதிராக மனநிலை கொண்ட ஒருவர் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும் போது தன்னுடைய தனிப்பட்ட அரசியல் வெறுப்புகளையும் குழந்தைகள் நிகழ்ச்சி என்றும் கூட பாராமல் அந்த நிகழ்ச்சியில் திணித்துள்ளார் என்றும் தமிழ்நாடு முழுவதும் மோடியை பிடிக்காதவர்கள் இருப்பது போன்ற ஒரு விஷமப் பிரசாரத்தை செய்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
ஏற்கனவே இதுபோன்று பிரதமர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்த ஒரு சிலர் தற்போது ஊடகங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு யூடியூப் சேனல்களில் தங்களுக்கு தாங்களே செய்தி செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நபரையும் ஜீ தொலைக்காட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்







