இந்தியா
தியேட்டரில் கைக்குழந்தை அழுகிறதா? கேரள திரையரங்கம் செய்த புதிய வசதி!

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கைக்குழந்தை திடீரென்று அழுதால் அந்த குழந்தையை சமாதானப்படுத்துவது போதும் போதும் என்றாகிவிடும். தியேட்டரில் குழந்தை அழுவது நமக்கு மட்டுமின்றி நம் அருகே படம் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் என்பதால் அது ஒரு இக்கட்டான நிலைமை மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை கவனித்த கேரள திரையரங்கம் கைக்குழந்தையுடன் வரும் பார்வையாளர்களுக்காக புதிய வசதி செய்து கொடுத்துள்ளது. கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்கில் அழுகை அறை என்ற புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறை முழுக்க முழுக்க கண்ணாடி தடுப்புகளால் இருக்கும் என்பதால் இதில் உட்கார்ந்து படம் பார்க்கும்போது குழந்தை அழுதால் மற்றவர்களுக்கு குழந்தையின் அழுகை சத்தம் கேட்காது.
மேலும் இந்த அழுகை அறையில் ஒரு தொட்டில் மற்றும் டயபர் மாற்றும் வசதி ஆகியவை இருக்கும் என்றும் இதனை குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசால் நடத்தப்படும் திரையரங்குகளில் இந்த அழுகை அறை வசதி அமைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இதேபோல் தனியார் திரையரங்குகளில் அமைக்க கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.























