சினிமா செய்திகள்
’பொன்னியின் செல்வன்’ படத்தின் அறிமுக பாடல்: பாடியது யார் தெரியுமா?

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கம்போஸ் செய்து ஏஆர் ரகுமான் முடித்த்8உவிட்டதாகவும் விரைவில் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலில் ஆரம்ப காட்சியிலேயே வந்தியத்தேவன் குதிரையில் செல்லும் ஒரு காட்சி இருக்கும் என்பது இந்த நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். இந்தக் காட்சியின்போது ஒரு அறிமுக பாடல் இருப்பதாகவும் இந்த பாடலை ஏஆர் ரகுமான் அவர்களே பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1955 ஆம் ஆண்டு ’நீலமலைத் திருடன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ என்ற பாடலை போன்று இந்த பாடல் இருக்கும் என்றும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இதன் முதல் பாகம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும், அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.















