இந்தியா
ஒரு பாம்பு இவ்வளவு உயரத்தில் இருக்க முடியுமா? அதிர்ச்சி வீடியோ..!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்றும் பாம்பு என்பது எப்போதுமே மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் வகையிலான விலங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. பாம்பிலிருந்து சில மருந்து பொருட்கள் எடுத்து மனிதனின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும் பாம்பால் மனிதர்களுக்கு பல தீமைகள் தான் ஏற்பட்டுள்ளது என்பது பாம்பு கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறிய பாம்பாக இருந்தாலும் பெரிய பாம்பாக இருந்தாலும் பாம்பை கண்டவுடன் பயந்து ஓடுவது தான் மனித இயல்பு . அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றில் மிகப்பெரிய கிங் கோப்ரா பாம்பு இருந்ததை பார்த்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பு என்பது எப்போதும் காடுகளில் வாழும் உயிரினங்கள் என்றாலும் காடுகளை தற்போது அழித்து நகரமாக்கி வரும் கலாச்சாரம் வளர்ந்து வருவதால் நகரங்களிலும் தற்போது பாம்புகள் சர்வசாதாரணமாக நடமாடி வருகிறது. இந்த நிலையில் இந்த வைரல் வீடியோ பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு பாம்பால் அதிகபட்சம் தரையில் மூன்றில் ஒரு பங்கு உடலை வைத்துக்கொண்டு மீதமுள்ள உடலால் எழுந்து நிற்க முடியும் என்று கூறப்படும் நிலையில் இந்த பாம்பு நீளம் கிட்டத்தட்ட ஒரு மரம் அளவுக்கு எழுந்து நிற்பது பெரும் அதிர்ச்சியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஊர்வன உயிரினம் இவ்வளவு பெரிய அளவில் எழுந்து நிற்க முடியுமா என்று பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
The king cobra can literally "stand up" and look at a full-grown person in the eye. When confronted, they can lift up to a third of its body off the ground. pic.twitter.com/g93Iw2WzRo
— Susanta Nanda (@susantananda3) February 27, 2023
உண்மையில் கிங் கோப்ரா என்பது ஒரு முழு வளர்ந்த நபரை விட அதிக உயரமாக இருக்கும் என்றும் பலர் கமெண்ட்ஸ்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் கிடைத்துள்ளது.
இயற்கை அன்னையின் அதிசயமான படைப்பு என்று ஒருவர் கமெண்ட் பகுதியில் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அனைத்து பாம்புகளுமே அதன் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி வரை நிற்க முடியும் என்றும் கிங் கோப்ராக்கள் 15 முதல் 18 அடி நீளம் வரை எழுந்து நிற்க முடியும் என்றும் ஒருவர் கமெண்ட் அடித்து உள்ளார்.