இந்தியா
மோடிக்கு பயம்: விளாசிய ராகுல் காந்தி!

லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இவ்வாறு செய்வதாகவும், இதனை எதிர்கொள்ள மோடிக்கு பயம் எனவும் கூறியுள்ளார் ராகுல் காந்தி.

#image_title
இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். என்னை பேச அனுமதிக்குமாறு மக்களவை சபாநாயகரிடம் கேட்டுள்ளேன், எனது கருத்துக்களை அவையில் முன்வைக்க எனக்கு உரிமை உள்ளது. நாளை எனக்கு பேச அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன்.
அதானி குறித்து நான் பேசியாவைகள் ஆட்சேபனைக்கு உரியது அல்ல. அதானிக்காக விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும், மோடிக்கும் அதானி விவகாரத்தை எதிர்கொள்வதில் பயம் இருக்கிறது. அதனால் தான் இதுபோன்ற விவகாரங்களை திசை திருப்புகின்றனர். மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது தான் என் முக்கியமான கேள்வி.
லண்டனில் நான் இந்தியாவை பற்றி தரக்குறைவாக எதுவும் பேசவில்லை. முதலில் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி அதானிக்கு எவ்வளவு சாதகமாக செயல்படுகிறார் என்பது பற்றியே பேசினேன். அதானி விவகாரத்தை மத்திய அரசு திசை திருப்ப பார்க்கிறது என்றார் ராகுல் காந்தி.