உலகம்
குளிர்பான விளம்பரத்திற்காக ரூ.3 கோடி சொகுசு காரை சுக்குநூறாக்கிய யூடியூபர்.. வைரல் வீடியோ..!

விளம்பர வீடியோவிற்காக லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கான பணம் செலவு ;செய்யப்படும் என்பது தெரிந்ததே. விளம்பர உத்திக்காக செலவு செய்யப்படும் இந்த பணம் மிகப்பெரிய வருவாயை தான் ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதே அனைவரது நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் குளிர்பான விளம்பரம் ஒன்றிற்காக ரூபாய் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர சொகுசு காரை சுக்கு நூறாக யூடியூபர் ஒருவர் நொறுக்கி இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மார்க்கெட்டிங் வித்தைகள் என்பது மிகவும் விசித்திரமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும் என்பதும் சில நேரங்களில் இவ்வளவு செலவு செய்து ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்கிறார்களா என்ற ஆச்சரியமும் ஏற்படும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது சொந்த தயாரிப்பான எனர்ஜி பானத்தை விளம்பரம் செய்வதற்காக ரூபாய் மூன்று கோடிக்கு மேல் மதிப்புள்ள லம்போர்கினி குருஸ் என்ற காரை சுக்குநூறாக நொறுக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவில் ஒரு லம்போர்கினி கார் முழுவதும் அவர் அந்த எனர்ஜி பானத்தை வைத்துள்ளார். மேலும் அவர் தனது கைகளில் ஒரு எனர்ஜி பணத்தை வைத்துக்கொண்டே ஓடி வருகிறார். அவருக்கு பின்னால் அந்த லம்போகினி கார் அருகில் ஒரு மிகப்பெரிய கிரேன் மூலம் ஒரு இரும்பு துண்டு தூக்கி எறியப்படுகிறது. அப்போது அந்த காரில் உள்ள குளிர்பானங்கள் தெறிப்பதோடு கார் முற்றிலும் சேதமடைகிறது.
இந்த வீடியோவை யூடியூபர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதன் பிறகு தனது பானத்தை ஒரு நல்ல பானம் என்றும் எல்லோரும் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். யூடியூப் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பெற்றுள்ளது என்றும் மில்லியன்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய பயனர்கள் இந்த மூர்க்கத்தனமான மார்க்கெட்டிங் வித்தையை பற்றி விவாதம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர். ஒரு தயாரிப்பு பொருளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று கோடி மதிப்புள்ள காரை சுக்குநூறாக நொறுக்குவதா என கண்டனங்களும் குவிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த காரை நொறுக்கியதன் மூலம் தான் இந்த பானம் தற்போது உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த விளம்பர வீடியோவை இதோ பாருங்கள்: