Connect with us

தமிழ்நாடு

இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான்… சீமான் வீடியோவை பகிர்ந்து மாட்டிவிட்ட பிரஷாந்த் கிஷோர்!

Published

on

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது உண்மை என்றும் இதற்கான வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்த பிரஷாந்த் கிஷோர் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

#image_title

முன்னதாக தமிழ்நட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை, இவற்றை புறக்கணிக்க கூடாது. போலி வீடியோக்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் பிரஷாந்த் கிஷோர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பரபரப்பு எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு மீண்டும் இதனை கிளறியுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் சீமான், இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று சீமான் பேசி உள்ளார். இதனை அந்த வீடியோவில் இந்தியிலும் மொழிபெயர்த்துள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களைப் பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
seithichurul
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்15 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!