சினிமா செய்திகள்
செப்டம்பர் 19-ம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா!

நடிகர் விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகில் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும், ஏ.ஆர்.ரகுமான் படத்தின் பாடல்களை ரசிகர்களுக்காகப் பாட உள்ளார்.
ஏற்கனவே பிகில் திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே உள்ளிட்ட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
















