சினிமா செய்திகள்
விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

தளபதி விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் இன்று காலை விவேக் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக மறைந்தார். அவரது மறைவு திரையுலகை மட்டுமின்றி சமுதாயத்தையும் உலுக்கியது என்பது குறிப்பிடதக்கது.
ஒரு கோடி மரங்கள் நடவேண்டும் என்ற இலக்குடன் சென்று கொண்டிருந்த அவரது பணி இடையில் அவரது மரணம் காரணமாக நின்று போனதை அடுத்து பலர் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவேக் உடன் பல திரைப்படங்களில் நடித்த விஜய், விவேக் மறைவு குறித்து ஒரு டுவிட் கூட பதிவு செய்யவில்லை என்று பலர் குற்றம் சாட்டினார். குறிப்பாக தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் சிலர் யூடியுப் வீடியோக்களில் விஜய் குறித்த இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று காலை விவேக் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விவேக் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து விஜய் அஞ்சலி செலுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
















