சினிமா
விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பாரா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிக்க உள்ள 64-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி ஆண்டுக்கு ஏழு, எட்டு படங்களில் நடித்து வருகிறார். தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி நல்ல கதை என்றால் சிறப்பு தோற்றம், வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடிக்க தயங்குவதில்லை. சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு வில்லன், விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு வில்லை என நடித்த விஜய் சேதுபதி பேட்ட படத்தில் ரஜினிக்கு எதிராக கூட நடித்திருக்கிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிற உள்ளது. தற்போது விஜய் சேதுபதியின் கையில் ஐந்து, ஆறு படங்கள் உள்ளதால் இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கால் ஷீட் ஒதுக்குவார என்பதும் சந்தேகம் தான்.

















