சினிமா
ஒரு வழியாக உறுதியான வலிமை ரிலீஸ் தேதி… இதாவது நடக்குமா?….

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கி வரும் படம் இது. இப்படம் துவங்கியதிலிருந்தே இப்படத்தின் அப்டேட்டை கேட்டு தல அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை நச்சரித்து வந்தனர். ஆனால், மனுஷன் எந்த அப்டேட்டையும் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஓய்ந்து போனார்கள்.

2 மாதங்களுக்கு முன்பு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் ஒன்றுக்கு 4 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

தற்போது வலிமை திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதிகட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியாக வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்கள் படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வலிமை பெரிய பட்ஜெட் படம் என்பதால் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்பதால் இன்னும் 3 மாதங்கள் வலிமை ரிலீஸ் தள்ளிப்போகிறது. அனேகமாக டிசம்பர் 23ம் தேதி வலிமை படம் வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

















