சினிமா
சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்கள் ரஜினியின் ‘கூலி’ ரிலீஸ் தினத்தில் விடுமுறை அறிவிப்பு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள் தங்களது தமிழ் ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளன.
‘ஃபார்மர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிடிஇ லிமிடெட்’ நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதோடு, ‘கூலி’ முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளையும், உணவு மற்றும் பானங்களுக்கு 30 சிங்கப்பூர் டாலர் (₹1,850 மதிப்பு) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை “ஊழியர் நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை முயற்சி” என நிறுவனம் விளக்கியுள்ளது.
அதேபோல், சிங்கப்பூரின் மற்றொரு நிறுவனம் ‘எஸ்பி மார்ட்’, ஆகஸ்ட் 14 அன்று காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்றும், 11:30 மணிக்கு பின் வழக்கம்போல் வணிகம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை கிளையுள்ள ஒரு நிறுவனம் கூட ‘கூலி’ வெளியீட்டையொட்டி தங்களது அனைத்து கிளைகளுக்கும் ஆகஸ்ட் 14 அன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், ரஜினிசம் 50 ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு முன்பதிவு டிக்கெட் விற்பனை சாதனை அளவில் உயர்ந்துள்ளது.
சென்சார் போர்டு ‘கூலி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இருந்தாலும், ஒரு தமிழ்ப் படத்திற்கு இதுவரை கிடைத்த அதிகபட்ச வெளிநாட்டு உரிமை தொகை இதுவாகும். உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு மேல் ஒரே நாளில் படம் வெளியாகவுள்ளது.
மேலும், ‘கூலி’ திரைப்படம், ஹ்ரித்திக் ரோஷன் – ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘வார் 2’ படத்துடன் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதனால், வசூலில் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

