சினிமா செய்திகள்
ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த புஷ்பா: வைரலாகும் போஸ்டர்!

தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்நிலையில், புஷ்பா தி ரூல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் தான் வெளியானது.
புஷ்பா திரைப்படம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில் மற்றும் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ‘புஷ்பா’. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை வாரிக் குவித்தது.
புஷ்பா தி ரூல்
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘புஷ்பா -தி ரூல்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும், 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால், அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புஷ்பா தி ரூல் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இப்படம் விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.