சினிமா செய்திகள்
’நாளை சிம்புவின் புதிய பட அறிவிப்பா? ரசிகர்கள் குஷி!

நடிகர் சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ’பத்து தல என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிம்பு நடிக்க வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்திரன் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை தமிழ் புத்தாண்டு தினத்தில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனேகமாக சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்று கூறப்படுவதால் இந்த ஆண்டே இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் இந்த ஆண்டுஇந்தப் படத்தையும் சேர்த்து மூன்று சிம்பு படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.















