சினிமா
வாரிசு பக்கா தமிழ் படம்ப்பா.. வியூஸ்க்கு மட்டும் Cumulative வரும்.. இந்த பொழப்புக்கு!

தமிழ்நாட்டில் விஜய் தான் பெரிய ஸ்டார் என்றும் நம்பர் ஒன் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் போட்ட பிட் எல்லாம் இப்படி துணிவு ட்ரெய்லர் வியூஸ் சாதனைக்கு முன்னாடி தூள் தூளாக உடைந்து விட்டதே!
கில்லி ஆடலாம், கபடி ஆடலாம், ஆனால் ஆணவத்தில் மட்டும் ஆடக் கூடாது என கில்லி படத்தில் விஜய் சொன்ன வசனம் அவருக்கே திருப்பி அடிக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என அஜித் ரசிகர்கள் ட்ரிபிளா திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
போனி கபூர் என்னன்னா ரியல் டைம் வியூஸ்னு தூக்கிட்டு வராரு.. தில் ராஜு என்னன்னா cumulative ரியல் டைம் வியூஸ் என தெலுங்கு வாரிசு ட்ரெய்லர் வியூஸையும் சேர்த்துட்டு வராரு.. 5 மொழியில் வெளியிட்டு மொத்த வியூஸையும் போட்டிக்கு விடலாமே என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அப்டேட் வியூஸில் கூட துணிவு படத்தை வாரிசு படத்தின் தமிழ் ட்ரெய்லர் நெருங்க முடியவில்லை என்பது தான் நீங்க நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என்கிற அளவுக்கு உண்மை.
ட்ரெய்லர் சாதனையை போலவே வசூலிலும் துணிவு வாரிசை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஓவர்சீஸ் ரிலீஸை லைகா செய்கிறது. 2.0 நெகட்டிவ் விமர்சனங்களுடனே 800 கோடி வசூல் என சொன்னார்கள். இந்த முறை வாரிசு நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறிவிடும் என்று தான் தெரிகிறது.