சினிமா
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
Published
4 weeks agoon
By
Saranya
மனோஜ் பாஜ்பாஜ், பிரியாமணி மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அந்த வெப்சீரிஸை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள புத்தம் புதிய வெப்சீரிஸ் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகிறது என்கிற அசத்தலான அப்டேட்டை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
கோலிவுட், டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. ஷாருக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி நடிகை கத்ரினா கைஃப் உடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும் நடித்துள்ளார்.
முன்னதாக மாநகரம் இந்தி ரீமேக்கிலும் விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இந்நிலையில், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அட்டகாசமாக உருவாகி உள்ள Farzi வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பை நடிகர் விஜய்சேதுபதி தற்போது தனது ட்விட்டர் பகக்த்தில் அறிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த அதிரடியான வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கியுடன் விஜய்சேதுபதி டெரர் லுக் கொடுக்கும் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வெப்சீரிஸில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் நடிகை ராஷி கன்னா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
You may like
-
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
-
விடுதலை படத்துக்கு ஒரு வழியா விடுதலை கொடுத்த வெற்றிமாறன்; 2 பார்ட் ஷூட்டிங்கும் ஓவராம்!
-
அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!
-
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
35 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு மெளனப்படம்: விஜய்சேதுபதி நடிக்கின்றார்
-
மீண்டும் ஒரே படத்தில் இணையும் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதிராவ் ஹைத்ரி!