இந்தியா
உத்தரபிரதேசத்தில் 3 மாதங்களுக்கு லாக்டவுனா? அதிர்ச்சி தகவல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று மாதங்கள் லாக்டவுன் அமலில் இருக்கும் என்று வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒன்று ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்த பாதிப்பு காரணமாக உத்தரப்பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் பகல் நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குறைந்தது மூன்று மாதங்கள் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அம்மாநில மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் ஊரடங்கு உத்தரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடும் அறிக்கையிலிருந்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு வருவதால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் சொந்த ஊரை நோக்கி செல்ல அவர்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.


















