இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

- தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக கே.மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஈரானில் சிக்கியிருந்த 312 இந்திய மீனவர்கள் ஆர்மீனியா வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கு உதவிய ஆர்மீனிய அரசுக்கும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருக்கும் ஒன்றிய அரசின் சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
- ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்த நிலையில் விசாரணையை தொடங்கியது சைபர் கிரைம் காவல்துறை!
- அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்தடைந்தது ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு.
- தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சனை மாற்றியதற்கான உத்தரவை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்.சந்தீப் மிட்டல் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம் எழுதியிருந்த நிலையில் அவரை ஆயதப்படை டிஜிபியாக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதைவிட அதிகமாக இந்திய குடும்பங்களிடம் மட்டும் சுமார் ரூ.415 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் குவிந்து கிடப்பதாக இந்திய தொழில் வர்த்தக சங்கமான ASSOCHAM தெரிவித்துள்ளது. இதில் 2 % முதலீடுகளாக மாறினால் கூட 2047க்குள் இந்தியா அசுர வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

















