இந்தியா
ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, தை பொங்கல், குடியரசு தினம் உள்பட பல்வேறு விடுமுறைகள் வருவதை அடுத்து அம்மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலான நாட்கள் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விடுக்கப்படும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இதோ:
ஜனவரி 1: புத்தாண்டு தினம் – ஐஸ்வால், சென்னை, காங்டாக் மற்றும் ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் செயல்படாது.
ஜனவரி 3: புத்தாண்டு கொண்டாட்டம்/லோசூங் – ஐஸ்வால் மற்றும் கேங்டாக் பகுதிகளில் விடுமுறை.
ஜனவரி 4: லோசூங் – கேங்டாக் பகுதியில் விடுமுறை
ஜனவரி 11: மிஷனரி தினம் -ஐஸ்வால் பகுதியில் விடுமுறை
ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் – கொல்கத்தா பகுதியில் விடுமுறை
ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல்- அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை
ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே
சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் – பெங்களூரு, சென்னை, காங்டாக் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட வங்கி கிளைகள் முழுவதிற்கும் விடுமுறை.
ஜனவரி 18: தை பூசம் -சென்னை அதாவது தமிழ்நாட்டில் விடுமுறை.
ஜனவரி 26: குடியரசு தினம் – இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா தவிர நாடு முழுவதும் விடுமுறை.


















