சினிமா செய்திகள்
விஜய் 65 அப்டேட்: நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் ‘காமெடி மன்னன்’!

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
#Thalapathy65Poojai@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/BYm9yygzWj
— Sun Pictures (@sunpictures) March 31, 2021
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial#Thalapathy65bySunPictures #PoojaHegdeInThalapathy65 pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures) March 24, 2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், ‘மெர்சல்,’ சர்கார்’ மற்றும் ‘பிகில்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக விஜய்யுடன் திரையைப் பகிர்ந்துக் கொள்கிறார் யோகி பாபு.







