சினிமா செய்திகள்
தர்ஷன்- லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் சூர்யா

தர்ஷன்- லாஸ்லியா நடிப்பில் உருவாகி உள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து உள்ளார். மேலும், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இதில் தர்ஷன் ரவிக்குமாரின் மகன் ஆக நடிக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடன் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். கூகுள் குட்டப்பா படத்துக்கு இசை அமைப்பாளர் கிப்ரான் இசை அமைத்துள்ளார். நடிகர் யோகி பாபுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் நாயகி ஆக ‘ஃப்ரெண்ட்ஷிப்’ என்னும் படத்திலும் நடித்து முடித்துள்ளார். நடிகர் தர்ஷன் ‘வேற என்ன வேண்டும்’ என மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.
Here’s the first look of #KoogleKuttapa my wishes to one of the coolest and respected @ksravikumardir sir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @GhibranOfficial @editorpraveen @twitavvi @Kavitha_Stylist @proyuvraaj pic.twitter.com/KZXYIizfEO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 3, 2021


















