சினிமா செய்திகள்
லாஸ்லியா நடித்த ‘ப்ரெண்ட்ஷிப்’ டிரைலர்!

பிக்பாஸ் லாஸ்யா நடித்த முதல் திரைப்படம் ‘ப்ரெண்ட்ஷிப்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவி கேரக்டரில் இந்த படத்தில் லாஸ்லியா நடித்துள்ளார். ஹர்பஜன்சிங், சதீஷ் ஆகியோர்களும் லாஸ்லியா நட்புடன் இருக்கும் நிலையில் லாஸ்லியாவுக்கு திடீரென ஒரு பிரச்சனை ஏற்டுகிறது. இதில் காவல்துறை களத்தில் புகுந்து ஒருசிலரை கைது செய்கிறது.
இதனை அடுத்து களத்தில் இறங்கும் ஆக்சன் கிங் அர்ஜுன், லாஸ்லியா மற்றும் அவருடைய நண்பர்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன் இரண்டாம் பாதியில் தான் இந்த படத்தில் வருகிறார் என்று தெரிகிறது.
கிரிக்கெட் வீரர் மற்றும் லாஸ்லியாவின் காதலராக நடித்திருக்கும் ஹர்பஜன்சிங் முதல் படத்திலேயே ஜொலித்து வருகிறார். அதேபோல் லாஸ்லியா அறிமுக நடிகை என்பது போலவே தெரியாத அளவிற்கு மிகவும் ஜாலியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷின் வழக்கமான காமெடியும் இந்த படத்துக்கு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதயகுமார் இசையமைப்பில், சாந்தகுமார் ஒளிப்பதிவில், தீபக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படம் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.