சினிமா செய்திகள்
டிரெண்டிங்கில் தளபதி 64; அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபரில் தொடங்கும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று மதியம் முதலே விஜய்யின் 64வது படத்திற்கான அப்டேட் வருகிறது என்ற ஆர்வத்தில் காத்திருந்த ரசிகர்கள், ட்விட்டரில் டிரெண்டிங்கில் தளபதி 64 ஹேஷ்டேகை கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மாலை 6 மணிக்கு சரியாக அந்த அப்டேட் வெளியானது. அதில், அடுத்த ஆண்டு சம்மருக்கு தளபதி 64 வெளியாகும் என்ற அறிவிப்பும், இசையமைப்பாளர் அனிருத் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து எடுக்கவுள்ள இந்த படம், வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாம்.






















