சினிமா செய்திகள்
நண்பர்களுக்கு சாலையோர கையேந்தி பவனில் விருந்து அளித்த ‘தல’ அஜித்- வைரல் புகைப்படம்

நடிகர் அஜித் தனது எளிமையால் மீண்டும் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்த வருவது வாடிக்கையாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படுகிறார். உச்ச நடிகர்கள் பலர் நட்சத்திர ஹோட்டல்களில் தான் சாப்பிடுவார்கள். ஆனால், தல அஜித் தனது நண்பர்களுக்கு சாலை ஓரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் விருந்து அளித்துள்ளார்.
ஜெர்கின் ஹூடி போன்ற உடையை அணிந்து கொண்டு மாஸ்க் உடன் முதலில் அந்த சாலை ஓற்ற உணவகத்துக்குள் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் சென்றுள்ளனர். முதலில் அஜித் தான் வந்துள்ளார் என்பது அங்கு இருக்கும் யாருக்கும் தெரியவில்லை. அதன் பின்னர் ஆர்டர் செய்த உணவு வந்த பின் சாப்பிடுவதற்காக அஜித் தான் அணிந்திருந்த மாஸ்க்-கை அவிழ்த்துள்ளார்.

அதன் பின்னரே சாலையோர கையேந்தி பவனுக்கு நடிகர் அஜித் வந்துள்ளார் என்பதே அங்கு இருந்தவர்களுக்குப் புரிந்துள்ளது. அஜித் சாப்பிட்டு முடித்த பின்னர் அந்த ஹோட்டல் முதலாளி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த ஹோட்டல் முதலாளி வெளியிட்ட புகைப்படமே தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கொரோனா அச்சம் இன்னும் அடங்கிய பின்னரே வலிமை படத்தை திரை அரங்குகளில் வெளியிட வேண்டும் என்று அஜித் படத் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.














