இந்தியா
ஹெலிகாப்டராக மாற்றப்பட்ட டாடா நானோ கார்: திருமணங்களுக்கு வாடகை!

ஒரு லட்ச ரூபாய்க்கு மிகவும் குறைந்த விலையில் டாடா நிறுவனம் விற்பனை செய்த நானோ காரை ஒருவர் ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து திருமணங்களுக்கு வாடகைக்கு விட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா நிறுவனத்தின் நானோ மிகவும் சின்னதாக இருந்தாலும் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் என்பதால் பலர் அதனை விரும்பி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த காரை ஹெலிகாப்டர் போன்ற வடிவமைப்பில் மாற்றி அதனை திருமணங்களுக்கு வாடகைக்கு விட்டு வரும் நபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.
ஹெலிகாப்டரில் ஒரு முறையாவது செல்லவேண்டும் என்று ஆசை உள்ளவர்கள் இந்த காரில் சென்றால் ஹெலிகாப்டரில் செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த கார் ஹெலிகாப்டர் போன்று வானத்தில் பறக்காது என்றாலும் தரையில் போகும் போது ஹெலிகாப்டரில் போவது போன்ற உணர்வு கிடைக்கும் என இந்த காரை ஹெலிகாப்டர் வடிவத்தில் மாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குட்டு சர்மா என்பவர் தெரிவித்துள்ளார் .
இந்த காரின் புதிய டிசைனை பார்த்து திருமணம் செய்யும் ஜோடிகள் இந்த காரை திருமணத்திற்காக வாடகைக்கு எடுத்து வருகிறார்கள் என்றும் இதன் மூலம் தனக்கு நல்ல வருமானம் வருவதாகவும் குட்டு சர்மா தெரிவித்துள்ளார் .
ஹெலிகாப்டர் வடிவத்தில் நானோ காரை மாற்றுவதற்கு தனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானதாகவும் அதன் பின்னர் சில அட்வான்ஸ் சிஸ்டத்திற்கு 50 ஆயிரம் செலவு செய்ததாகவும் குட்டு சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.