தமிழ்நாடு
ஹெலிகாப்டரில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்த அண்ணாமலை: காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பாஜக கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்துள்ளது தேசிய தலைமை. இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அண்ணாமலை ஹெலிக்காப்டரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

#image_title
சமீபத்தில் தேர்தல் பணிக்காக கர்நாடகத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்திற்கு அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்தார். பொதுவாக காரில் பயணிக்கும் அண்ணாமலை ஹெலிகாப்டரில் வந்ததை காங்கிரஸ் கட்சியினர் சர்ச்சையாக்கியுள்ளனர். உடுப்பி மாவட்டத்தின் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மூத்த தலைவருமான வினய்குமார் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது அதில் பைகளில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடக வாக்காளர்களுக்கு விரைவில் அந்த பணம் பட்டுவாடா செய்யப்படலாம். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இவரது இந்த குற்றச்சாட்டு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.