Connect with us

இந்தியா

என் மகள் இருக்கிறார்.. டாடா பின்வாங்கியதால் பிஸ்லெரி நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு..!

Published

on

உலகின் முன்னணி மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது டாடா குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டு விட்டதாக செய்திகள் வெளியானது. பிஸ்லரி நிறுவனத்தை வாங்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாகவும் பிஸ்லெரி நிறுவனத்தை வாங்கவில்லை என்றும் டாடா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் உள்பட வேறு சில நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் டாடா குழுமம் தனது நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்ட பிறகு வேறு யாருக்கும் இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்றும் என் மகளே இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவார் என்றும் பிஸ்லரி நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய போது ’டாடா கன்ஸ்யூமர் ப்ரோடக்ட்ஸ் நிறுவனம் 7000 கோடி ஒப்பந்தத்தை தொடராததால் பிஸ்லெரி பாட்டில் நிறுவனத்தை எனது மகளே கவனித்துக் கொள்வார் என்றும் ஜெயந்தி சவுகான் எங்கள் தொழில் முறை குழுவுடன் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.

42 வயதான ஜெயந்தி சவுகான் தனக்கு பிஸ்லரி நிறுவனத்தை நடத்த விருப்பம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருப்பதால் தான் இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய ரமேஷ் செளஹான் முடிவு செய்தார். அவர் தனக்கு 82 வயதாகி விட்டதால் இந்த நிறுவனத்தை தன்னால் நடத்த முடியவில்லை என்றும் தனது மகளுக்கும் இந்த நிறுவனத்தை நடத்த ஆர்வமில்லை என்பதால் தான் டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அவர் முன் வந்தார். ஆனால் தற்போது டாடா நிறுவனம் பிஸ்லரி நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை என்பதால் தன் மகள் தொடர்ந்து நடத்துவார் என்றும் வேறு யாருக்கும் இந்த நிறுவனத்தை விற்பனை செய்ய தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜெயந்தி செளகான் தற்போது அவரது தந்தை பதவியை ஏற்க உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் துணை தலைவராக பதவி ஏற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வணிக வட்டாரங்கள் கூறிய போது ஏஞ்சலா ஜார்ஜ் என்பவர் தொழில் முறை நிர்வாக குழுவுடன் இணைந்து தலைமை பதவியை ஏற்பார் என்றும் 82 வயதான ரமேஷ் சவுகானுக்கு பிறகு இந்த நிறுவனத்தை அவர் சிறப்பாக நடத்துவார் என்றும் கூறியுள்ளனர். அவருக்கு உறுதுணையாக இருந்து நிறுவனத்தின் துணை தலைவராக ஜெயந்தி செளஹான் பணிபுரிவார் என்றும் தொடர்ந்து பிஸ்லெரி நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் பிஸ்லெரி நிறுவனத்தை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தற்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அந்த நிறுவனம் தங்களுக்கு கிடைக்கும் என்று ஆர்வத்துடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது நிறுவனத்தை கவனித்து வந்தாலும் தற்போது முழு அளவில் அவர் தனது கவனத்தை இந்த நிறுவனத்தில் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா21 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா23 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா1 day ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா23 hours ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

%d bloggers like this: