தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் இரண்டு நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் கனமழை பெய்தது என்பதும் அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளன என்பதும் தெரிந்ததே. இம்மாத ஆரம்பத்தில் கூட திடீரென சென்னையில் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் வரும் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் மீண்டும் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 31ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் 4 முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டங்கள் வரை சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் காலையில் நல்ல மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்ற தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
From tonight to Saturday morning moderate rains will be there in chennai belt.
From 31st mini cold days will start in Chennai and surroundings for 4 to 5 days.
Delta to Tuty will get very good rains on Saturday to Sunday morning. Some places might get isolated heavy rains.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) January 27, 2022












