சினிமா
சூர்யா தனி விமானம் வாங்கினாரா? வதந்திக்கு முற்றுப்புள்ளி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா குறித்த ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால், சூர்யா ரூ.120 கோடி மதிப்பில் தனி விமானம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டிற்காக சூர்யா தீவிரமாக பரபரப்பாக இருக்கும் வேளையில், இந்த வதந்தி இணையத்தில் பரவியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சினிமா விமர்சகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில், சூர்யா தனி விமானம் வாங்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
சூர்யா தரப்பில் இருந்து இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தனி விமானம் வாங்கியதாக பரவும் செய்தி உண்மையல்ல. இது ஒரு வதந்தி மட்டுமே.












