சினிமா செய்திகள்
சூர்யா பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸா? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
Published
2 years agoon
By
Shiva
சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.
பாண்டிராஜ் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்கும் சூர்யா அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You may like
பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா திடீர் விலகல்.. இதுதான் காரணம்!
திமுக எம்பியின் மகன் திருச்சியில் திடீர் கைது: அண்ணாமலை கண்டனம்
‘சூரரை போற்று’ இந்தி ரீமேக்கிலும் சூர்யா; மாஸ் புகைப்படம் வைரல்
ரோலக்ஸ் கேரக்டருக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம்: கமல்ஹாசன் அசத்தல்
சூர்யா காட்சியின்போது தீப்பிடித்த திரை: ‘விக்ரம்’ படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி
ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது: ‘விக்ரம்’ படம் குறித்து கார்த்டி