தமிழ்நாடு
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் விதிமுறையில் தமிழகத்திற்கு மட்டும் திருத்தம் செய்ய அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்!

தீபாவளியின் போது மாலை 8 மணி முதல் 10 மணிக்குள் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை எதிர்த்துத் தமிழ் நாடு அரசு மேல் முறையீடு செய்து தமிழ் நாட்டிற்குக் கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டு இருந்தது.
வட இந்தியாவில் தீபாவளிக்கு பட்டாசுகளை மாலை நேரங்களில் வெடிப்பதே வழக்கம். இதுவே தமிழ் நாட்டில் காலையில் வெடிப்பதை ஒரு சடங்காகவும் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் நாடு அரசின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பினை இன்று வழங்கிய உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் தான் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்ற விதியில் மாற்றம் செய்ய முடியாது என்றும் வேண்டும் என்றால் காலையோ அல்லது மாலையோ பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழ் நாடு அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேவைப்பட்டால் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என்றும் மாற்றம் செய்துகொள்ளலாம் என மாற்றம் செய்துகொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



















