Connect with us

தமிழ்நாடு

இரண்டரை கோடி வாங்கினேனா? டிடிவி தினகரன் விளக்கம்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வைகுண்டராஜனிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தலின் போது வாங்கியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து இதனை மறுத்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான தொழில் அதிபர்களில் ஒருவரான வைகுண்டராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுடன் நெருக்கமானவர் என அறியப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாகத்தான் திசையன்விளை, சென்னையில் எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள விவி மினரல்ஸுக்குச் சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்திவந்ததாக ஒரு தகவல் பரவுகிறது.

இந்நிலையில் இந்த சோதனையின் போது விவி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், சோதனையின்போது கணக்கில் வராத எட்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது விவி மினரல்ஸ் நிறுவனம், தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரி சோதனையின்போது சிக்கியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தமிழ் பஞ்சாங்கம்2 மணி நேரங்கள் ago

இன்றைய பஞ்சாங்கம் – 16 டிசம்பர் 2025 (செவ்வாய்க்கிழமை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 டிசம்பர் 2025 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா13 மணி நேரங்கள் ago

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் 67 ரேடியோகிராபர் பணியிடங்களுக்கும் 11 ஆடியோமெட்ரீசியன் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 15.12.2025

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய தமிழ்பஞ்சங்கம் 15.12.2025: திதி, நட்சத்திரம், ராகு காலம், யமகண்டம் முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

இன்றைய ராசிபலன் 15.12.2025: வேலை, பணம், ஆரோக்கியம்—12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

காதலுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத பெண்கள்: இந்த 4 ராசி பெண்களின் காதல் விசுவாசம்!

ஆன்மீகம்1 நாள் ago

100 ஆண்டுகளுக்குப் பிறகு புதன் பெயர்ச்சியால் உருவான இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்!

ஆரோக்கியம்1 நாள் ago

மாலை ஸ்நாக்ஸுக்கு ஆரோக்கிய தேர்வு: சத்தான கம்பு இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

2026 கேது பெயர்ச்சி பலன்: கடக ராசியில் கேது நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி உயர்வு!

தமிழ்நாடு6 நாட்கள் ago

சொத்து பத்திரம் தொலைந்துவிட்டதா? டூப்ளிகேட் சொத்து பட்டா பத்திரம் எடுக்கும் எளிய ஆன்லைன் முறை!

ஆன்மீகம்4 நாட்கள் ago

“12.12.2025 தமிழ்பஞ்சாங்கம்: இன்று திதி, நட்சத்திரம், ராகுகாலம் மற்றும் நல்ல நேரங்கள்”!

வணிகம்7 நாட்கள் ago

2026ல் தங்கம் விலை புதிய உச்சம் எட்டுமா? $5,000 ஐ தாண்டும் என முன்னணி நிதி நிறுவனங்கள் கணிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அமலாக்கம் எப்போது? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த முக்கிய அப்டேட்!

வணிகம்7 நாட்கள் ago

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அஞ்சல் துறையின் Senior Citizen Savings Scheme – உச்ச வட்டி மற்றும் பாதுகாப்பான முதலீடு!

வணிகம்6 நாட்கள் ago

EPFO 3.0 : இபிஎஃப் உறுப்பினர்களுக்கு UPI–ATM மூலம் உடனடி பணம் எடுக்கும் புதிய வசதிகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

புத்தாண்டு பலன் 2026: தனுசு ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் தரும் ஆண்டு!

வணிகம்5 நாட்கள் ago

EPF பணத்தை ஓய்வுக்கு முன்பே எடுக்கலாமா? இபிஎஃப் பணம் எடுக்கும் புதிய விதிகள் முழு விவரம்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

Translate »