சினிமா
ஸ்டைல் ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் சிங்கிள் பாடலான மரண மாஸ் எனும் பாடல் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் ரஜினியின் மாஸ் காட்டும் ஸ்டைலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிமஞ்சாரோ பாடலில் எவ்வளவு அழகாக தோன்றினாரோ அதை விட யூத்தாக ரஜினி இந்த போஸ்டரில் அவ்வளவு அழகாகவும் இளமையாகவும் உள்ளார்.
பொங்கலுக்கு ரிலீசாகும் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களுக்கு போட்டியாக ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.
























