Connect with us

சினிமா செய்திகள்

விஷால், ஆர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘டாக்டர்’ ரிலீஸ் தேதி!

Published

on

விஷால் மற்றும் ஆர்யா நடித்த திரைப்படங்கள் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சிவகார்த்திகேயன் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ’எனிமி’ மற்றும் ஆர்யா மற்றும் சுந்தர் சி இணைந்து நடித்த ’அரண்மனை 3’ ஆகிய திரைப்படங்கள் வரும் ஆயுத பூஜை தினத்தில் அதாவது அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதூ.

இந்த நிலையில் சற்று முன்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் மற்றும் ஆர்யா படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

அக்டோபர் 13-ஆம் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் ரிலீஸ் ஆவதால் ’எனிமி’ மற்றும் ’அரண்மனை 3’ திரைப்படங்களின் வசூல் பாதிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில், கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Creator storefront at a flat 5% fee – with DR68 SEO and zero monthly fees..