சினிமா செய்திகள்
இயக்குனர் ஷங்கரின் அடுத்த பட பூஜை: வைரல் புகைப்படம்!

பிரபல இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே
இந்த படம் குறித்த சர்ச்சைகள் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது. இன்றைய பூஜையில் ஷங்கர், ராம்சரண் தேஜா, சிரஞ்சீவி, கைரா அத்வானி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக லிங்குசாமி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக கைரா அத்வானி நடிக்க உள்ளார் என்பதும் மேலும் இந்த வழக்கில் அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா ஆகியோர்களும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ் தமன் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த படத்திற்கு ’விஸ்வாம்பாரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இன்று முதல் ராம் சரண் தேஜாவின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சில நாள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ஷங்கரின் ’இந்தியன் 2’ படத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.



















