சினிமா
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் தம்பி விஜய் என சீமான் பாராட்டி பேசியிருப்பது மீண்டும் சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் தளபதி விஜய்யை சூப்பர்ஸ்டார் என பேசியது கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக சமூக வலைதளங்களில் அனல் பறக்கும் சண்டைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தற்போது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக தம்பி வளர்ந்துள்ளது அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் அதை யாரும் மறக்க முடியாது என பேசி உள்ளார்.
மேலும், தனது தந்தையுடன் நடிகர் விஜய்யின் வீட்டை தாண்டி வாக்கிங் செல்லும் போது அந்த வீட்டை பார்த்து விட்டு என் தந்தை இந்த பையன் என்னம்மா டான்ஸ் ஆடுறான் பா என பேசினார். இந்தியாவிலேயே தம்பி விஜய் போல யாராலும் நடனம் ஆட முடியாது. அந்தளவுக்கு அதில் அவர் காட்டும் முக பாவணைகள் எல்லாமே உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என பாராட்டி உள்ளார்.
சீமான் மீண்டும் சூப்பர்ஸ்டார் விஜய் என பேசியுள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போகிற போக்கை பார்த்தால் ட்ரெய்லரை தவிர்த்தது போல வாரிசு படத்தையும் ரஜினிகாந்த் ரசிகர்கள் குடும்பத்தோடு பார்க்காமல் தவிர்த்து விடுவார்கள் போல இருக்கே என நெட்டிசன்கள் பஞ்சாயத்தை கூட்டி வருகின்றனர்.